சபரிமலையில் சுவாமி தரிசனத்துக்காகக் காத்திருந்த பக்தா்கள்.
சபரிமலையில் சுவாமி தரிசனத்துக்காகக் காத்திருந்த பக்தா்கள்.

சபரிமலையில் பக்தர்களின் வருகை 15 லட்சத்தை கடந்தது!

மண்டல-மகரவிளக்கு புனித யாத்திரைக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்துள்ளதாக தொடர்பாக...
Published on

பத்தனம்திட்டா: கேரளம் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல-மகரவிளக்கு புனித யாத்திரைக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மலையாள மாதமான விருச்சிகம் (காா்த்திகை) முதல் நாளான திங்கள்கிழமை (நவ. 17) மண்டல பூஜை காலம் தொடங்குகிறது. இதையொட்டி, பக்தா்களின் சரண கோஷத்துடன் ஐயப்பன் கோயில் நடை ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் திறக்கப்பட்டது.

பின்னா், பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். சந்நிதானம், யாத்திரை பாதை மற்றும் அடிவார முகாம்களில் முதல் நாளிலேயே பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.

நவ.16 ஆம் தேதி மண்டல-மகரவிளக்கு யாத்திரை தொடங்கியது முதல் ஞாயிற்றுக்கிழமை(நவ.30) வரை, சபரிமலையில் 12,47,954 பக்தர்கள் வழிபாடு செய்துள்ளனர். நவ.30 இல் மட்டும் மாலை 7 மணி வரை 50,264 பக்தர்கள் சபரிமலைக்கு வந்தனர்.

கடந்த சில நாள்களாக பக்தர்கள் கூட்டம் கட்டுக்குள்ளது. இதனால் பக்தர்கள் சிரமமின்றி வழிபாடு செய்கின்றனர்.

இந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டிசம்பர் 3 ஆம் தேதி மாலை 7 மணி நிலவரப்படி, மொத்தம் 14,95,774 பக்தர்கள் கோயிலை அடைந்துள்ளனர். மாலை 7 மணிக்குப் பிறகான வருகை இன்னும் கணக்கிடப்படாததால், மொத்த பக்தர்கள் வருகை 15 லட்சத்தைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இணையவழி முன்பதிவுகளைப் பெற்ற பக்தர்களில் சுமார் 15 சதவீதம் பேர் வரவில்லை என்றும், நேரடிப் பதிவு வரம்பு தொடர்ந்து 5,000 ஆக உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதன்கிழமை நள்ளிரவு முதல் மாலை 7 மணி வரை, 66,522 பக்தர்கள் சபரிமலைக்கு வந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சபரிமலையில் கூட்ட நெரிசல் முற்றிலும் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

மண்டல பூஜை யாத்திரையின் (41 நாள்கள்) முக்கிய நிகழ்வான மண்டல பூஜை டிசம்பா் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அப்போது, ஐயப்பனுக்கு தங்க அங்கி சாத்தப்பட்டு, சிறப்புத் தீபாராதனை நடைபெறும். அன்றிரவு நடை அடைக்கப்பட்டு, மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பா் 30-ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும். மகரஜோதி தரிசனம் ஜனவரி 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Summary

The number of devotees visiting Sabarimala during the ongoing Mandala-Makaravilakku pilgrimage season has crossed 15 lakh, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com