அறிவுச்சூரியன் அம்பேத்கர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்து மேலெழுந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர் ....
அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி, அவரது திருவுருப் படத்திற்கு மரியாதை செலுத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின்
அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி, அவரது திருவுருப் படத்திற்கு மரியாதை செலுத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின்
Updated on
1 min read

சென்னை: புரட்டுகளைப் பொசுக்கிய புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி, கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்து மேலெழுந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய சட்ட மேதை அம்பேத்கரின் 70 ஆவது நினைவு நாள் இன்று(டிச.6) அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி, அவரை புகழ்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

சனிக்கிழமை வெளியிட்டுள்ள அந்த பதிவில் தெரிவித்திருப்பதாவது:

எல்லா விதத்திலும் தன்னை அடக்கி ஒடுக்கும் ஓர் அமைப்புக்குள் இருந்து, கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்து மேலெழுந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர். அன்று அவரை அடக்க நினைத்த அதே ஆதிக்கக் கூட்டம் இன்று அவரைத் துதிப்பதுபோல நடிக்கிறதே, அதுதான் அவரது வெற்றி.

அவரது வாழ்வே ஒரு பாடம்! அவரது போராட்டங்களே சமத்துவச் சமூகத்தை நோக்கிய பயணத்தில் நமக்கு ஊக்கம்! அண்ணல் அம்பேத்கர் எனும் பேரொளியின் வெளிச்சத்தில் தொடர்ந்து முன்னேறுவோம்! என கூறியுள்ளார்.

Summary

Group that suppressed him, now pretends to praise him": MK Stalin takes subtle dig at opponents on Ambedkar remembrance day

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com