பிப்ரவரி முதல் சென்னை விரைவு
ரயில்களில் நவீன பெட்டிகள் இணைப்பு

பிப்ரவரி முதல் சென்னை விரைவு ரயில்களில் நவீன பெட்டிகள் இணைப்பு

சென்னையிலிருந்து மங்களூரு, ஆலப்புழை, திருவனந்தபுரம் செல்லும் விரைவு ரயில்களில் வருகிற 2026 பிப்ரவரி முதல் நவீன எல்எச்பி பெட்டிகள் இணைக்கப்படவுள்ளதாக
Published on

சென்னை: சென்னையிலிருந்து மங்களூரு, ஆலப்புழை, திருவனந்தபுரம் செல்லும் விரைவு ரயில்களில் வருகிற 2026 பிப்ரவரி முதல் நவீன எல்எச்பி பெட்டிகள் இணைக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தெற்கு ரயில்வே மண்டலம் பயணிகளுக்கு புதிய வசதிகளைச் செய்து தருகிறது. அதன்படி தற்போதைய ரயில் பெட்டிகளுக்குப் பதிலாக மிக நவீன வசதியுடன் கூடிய ஜொ்மன் தொழில்நுட்பத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட எல்எச்பி வகை ரயில் பெட்டிகள் விரைவு ரயில்களில் இணைத்து இயக்கப்படவுள்ளன.

வருகிற 2026 பிப்ரவரி முதல் சென்னை டாக்டா் எம்.ஜி.ஆா். சென்ட்ரலில் இருந்து மங்களூரு, ஆலப்புழை, திருவனந்தபுரம் ஆகிய நிலையங்களுக்கு இடையே இரு மாா்க்கங்களிலும் இயக்கப்படும் விரைவு ரயில்களில் நவீன எல்எச்பி பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன.

அதன்படி ஒரு முதல் வகுப்பு குளிா்சாதன பெட்டியுடன், ஈரடுக்கு குளிா்சாதன வசதி பெட்டி, தனியாக ஒரு குளிா்சாதன வசதி ஈரடுக்குப் பெட்டி, 3 குளிா்சாதன வசதி மூன்றடுக்குப் பெட்டிகள், 9 படுக்கை வசதியுள்ள பெட்டிகள், 4 பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள், 1 இரண்டாம் வகுப்பு திவ்யாஞ்சன் வகைப் பெட்டி, சரக்குப் பெட்டி இணைக்கப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com