

சென்னை: தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 88 கிராம் ஊராட்சிகளை உருவாக்கம் செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ஊராக உள்ளாட்சி அமைப்புகளை மறு சீரமைப்பு செய்ய அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் புதிய ஊரக உள்ளாட்சி அமைப்புகள் உருவாக்கட்டு வருகின்றன.
இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 88 கிராம ஊராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 35 கிராம ஊராட்சிகளில் 27 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்பட்டு புதிதாக 88 கிராம ஊராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் 35 கிராம ஊராட்சிகள் 95 கிராம ஊராட்சிகளாக மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. 9 கிராம ஊராட்சிகள் மட்டும் மறுசீரமைப்பு செய்யப்படாமல் உள்ளது என கூறப்படுகிறது.
மாவட்டத்தில் 35 ஆக இருந்த கிராம ஊராட்சிகளின் எண்ணிக்கை இப்போது 95 கிராம ஊராட்சிகளாக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.