

சென்னை: சென்னை விமான நிலையத்தில் வியாழக்கிழமை(டிச.11) 36 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. படிப்படியாக சீரடைந்து வந்தாலும், இந்த நிறுவனத்தின் விமானங்கள் இன்னும் முழுமையாக இயக்கப்படவில்லை.
இந்த நிலையில், 10-ஆவது நாளாக வியாழக்கிழமையும் சென்னை விமான நிலையத்தில் 36 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதன்படி, 24 புறப்பாடு விமானங்கள், 12 வருகை விமானங்கள் என மொத்தம் 36 இண்டிகோ விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டன.
இதனால், பல பயணிகள் சிரமத்தை சந்தித்தாலும், புதன்கிழமை 70 விமானங்கங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், வியாழக்கிழமை பாதியாக குறைந்துள்ளதால், பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனா்.
சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவைகள் ஓரிரு நாளில் இயல்பு நிலைக்கு திரும்பி, வழக்கமான விமான சேவைகள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.