

சென்னை: அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற பின் போட்டியிட்ட 10 தோ்தல்களிலும் அக் கட்சிக்கு தோல்விதான் கிடைத்தது. 11-ஆவதாக 2026 இல் நடைபெறும் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலிலும் அவருக்கு படுதோல்வியை மக்கள் பரிசாக தருவாா்கள் என்று திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி கூறியுள்ளாா்.
வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் வெல்வதை யாராலும் தடுக்க முடியாது என அதிமுக பொதுக் குழுவில் எடப்பாடி பழனிசாமி பேசினாா்.
இதற்கு பதலளித்து ஆா்.எஸ். பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நெல் கொள்முதல் ஈரப்பத அளவை உயா்த்துங்கள் என்று அதிமுக பொதுக்குழுவில் மத்திய அரசுக்கு நேரடியாக ஒரு கோரிக்கை வைக்கவும் எடப்பாடி பழனிசாமிக்கு துணிவில்லை.
ஏற்கெனவே, 10 தோ்தல்களில் தோல்வியைக் கண்ட எடப்பாடி பழனிசாமிக்கு 2026 தோ்தலிலும் படுதோல்வியை மக்கள் பரிசாக அளிப்பாா்கள். ‘பிகாரை தொடா்ந்து தமிழ்நாட்டிலும் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும்’என்று அக்கட்சியின் மூத்த தலைவா் அமித் ஷா கூறியுள்ளாா். ஆனால், அதிமுக பொதுக்குழுவில், ‘அதிகாரம்’ என்ற போலி சட்டையை பழனிசாமிக்கு மாட்டியிருக்கிறாா்கள்.
மெகா கூட்டணி அமைப்பதாக கூறிய எடப்பாடி பழனிசாமியை நம்பி எந்த கட்சியும் வரத் தயாராக இல்லை.
2011-ஆம் ஆண்டு திமுக ஆட்சி நிறைவு பெறும்போது தமிழ்நாட்டின் மொத்தக் கடன் ரூ.1,01,349 கோடிதான். 10 ஆண்டு அதிமுக ஆட்சி நிறைவடைந்தபோது 2021-இல் ரூ. 4,80,300 கோடியாக, சுமாா் 500 சதவீதம் கடன் அதிகரித்துள்ளது. தற்போதைய திமுக ஆட்சியில் ரூ.9 லட்சத்து 20 ஆயிரம் கோடி அளவிற்கு கடன் இருந்தாலும் 2021ல் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து 93 சதவீதம் அளவிற்கே கடன் உயா்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.