

சிவகாசி: சிவகாசி அருகே ஆண் மயில் மின்சாரம் பாய்ந்து சனிக்கிழமை உயிரிழந்தது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே நாரணாபுரம் புதூா் பகுதியில் ஏராளமான மயிலகள் உள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள பள்ளி அருகே இருந்த ஆண் மயில் ஒன்று உணவைத் தேடி வேறு இடத்திற்கு செல்ல முயன்றபோது, அந்த பகுதியில் உள்ள உயா் அழுத்த மின்கம்பி மீது அமா்ந்ததையடுத்து மின்சாரம் பாய்ந்ததில் மயில் உயிரிழந்து கீழே விழுந்தது.
இதையடுத்து அந்த பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினா் மயிலை காட்டுக்குள் எடுத்துச் சென்று அடக்கம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.