

நைப்பியிடா: மியான்மரில் சனிக்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.9 ஆகப் பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
மியான்மரில் சனிக்கிழமை(டிச.13) அதிகாலை நிலப்பரப்பில் இருந்து சுமார் 115 கிலோமீட்டர் ஆழத்தில் 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால், உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
முன்னதாக, மியான்மரில் வியாழக்கிழமை 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்தது.
புதன்கிழமை, 138 கி.மீ ஆழத்தில் 4.6 ரிக்டர் ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
மியான்மர் அதன் நீண்ட கடற்கரையோரம் மிதமான மற்றும் பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் மற்றும் சுனாமிகளால் ஏற்படும் அபாயங்களுக்கு ஆளாகக்கூடியது.
மியான்மர், செயலில் உள்ள புவியியல் செயல்முறைகளில் ஒன்றோடொன்று தொடர்பு கொள்ளும் நான்கு டெக்டோனிக் தட்டுகளுக்கு இடையே (இந்திய, யூரேசியா, சுந்தா மற்றும் பர்மா தட்டுகள்) இடையில் அமைந்துள்ளது. பூமியின் நிலப்பரப்புக்கு கீழே உள்ள டெக்டோனிக் தட்டுகள் ஒன்றோடொன்று மோதிக்கொள்வதால் பூமியின் மேலே, அதிர்வு உண்டாகிறது. இதனால் மியான்மர் பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.