

சென்னை: சகிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசும் சென்னை விமான நிலையம் எப்படி ஒரு சர்வதேச விமான நிலையமாக இருக்க முடியும்? என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சென்னை விமான நிலையத்தின் 4 ஆவது முனையத்தின் பிரதான வரவேற்பறையிலிருந்து வெளியேறி சாலைக்கு வரும்போது, சகிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது.
இந்த துர்நாற்றம் விமான நிலைய மேலாளருக்கோ அல்லது இந்திய விமான நிலைய ஆணையத்தின் அதிகாரிகளுக்கோ அல்லது ஊழியர்களுக்கோ தெரியவில்லையா?
இது எப்படி ஒரு சர்வதேச விமான நிலையமாக இருக்க முடியும்? என சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள விமான நிலைய நிர்வாகம்,
தங்களுக்கு ஏற்பட்ட விரும்பத்தகாத அனுபவத்திற்கு நாங்கள் மனப்பூர்வமாக வருந்துகிறோம். பயணிகளுக்கு சிரமம் ஏற்படாத வகையில், பயணிகள் நடமாட்டம் குறைவாக உள்ள நேரங்கள் மற்றும் இரவு நேரங்களில் குப்பைகளை அகற்றும் லாரி இயக்கப்பட்டு வருகிறது. அந்த லாரி, பத்து நிமிடங்களுக்கு முன்புதான் அந்தப் பகுதியைச் கடந்து சென்றது. அதனால் துர்நாற்றம் அங்கே வீசியிருக்கலாம். எங்களுடைய 24 மணி நேர பணி மேலாளர்கள் அந்த பகுதியைத் தொடர்ந்து கண்காணித்து பராமரிப்பை உறுதி செய்து வருகிறார்கள் என தெரிவித்துள்ளது. இது நல்லாயிருக்கே..!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.