100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!

100 நாள் வேலைத் திட்டத்தில் காந்தி பெயரை நீக்குவதற்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்...
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்
Updated on
1 min read

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்துக்கு மாற்றாக 'வளா்ந்த பாரத வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார ஊரக உறுதியளிப்புச் சட்ட' (VB- G RAM G) மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு இன்று அறிமுகம் செய்தது.

மத்திய விவசாயத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், நாடாளுமன்ற மக்களவையில் இந்த மசோதாவை இன்று தாக்கல் செய்தார்.

இதையடுத்து மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மக்களவையில் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பிரியங்கா காந்தி, டி.ஆர். பாலு, ஜோதிமணி உள்ளிட்டோர் இந்த மசோதாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காந்தியின் புகைப்படங்களை கையில் ஏந்தி நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக இந்த மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, திமுக எம்.பி. டி.ஆர். பாலு உள்ளிட்டோர் புதிய மசோதாவுக்கு எதிராகப் பேசினர்.

Summary

Opposition leaders protest against VB-G RAM G Bill in parliament

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com