

புதுதில்லி: மோசமடைந்து வரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்திய நிலையில், பிஎஸ் 4 தரத்திற்குக் குறைந்த உமிழ்வு தரங்களுடன் இணங்கும் தில்லி அல்லாத பதிவு செய்யப்பட்ட பிற மாநில தனியார் வாகனங்கள் தலைநகருக்குள் நுழைய விதிக்கப்பட்ட தடை வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
பி.யு.சி சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் வழங்கப்படுவதில்லை. இது தானியங்கி நம்பர் பிளேட் ரீடர் கேமராக்கள், பம்புகளில் குரல் எச்சரிக்கைகள் மற்றும் காவல்துறையின் உதவியுடன் அமல்படுத்தப்படுகிறது.
இந்த நடைமுறை அமலுக்கு வந்ததை அடுக்கு வியாழக்கிழமை எல்லைகள் உட்பட 126 சோதனைச் சாவடிகளில் 580 போலீசார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
கூடுதலாக, போக்குவரத்து காவல்துறையுடன் இணைந்து, அமலாக்கத் துறையின் குழுக்களும் பெட்ரோல் பம்புகள் மற்றும் எல்லைப் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இருப்பினும், தில்லியில் பதிவு செய்யப்பட்ட வணிக சரக்கு வாகனங்கள், பிஎஸ் 4 தரநிலைகளுக்கு இணக்கமான வாகனங்கள் அல்லது சிஎன்ஜி, எல்என்ஜி அல்லது மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள், பொதுப் போக்குவரத்து வாகனங்கள், அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அல்லது அத்தியாவசிய சேவைகளை வழங்கும் வாகனங்களுக்கு எந்த தடையும் இருக்காது.
கிரேப் -4 கட்டுப்பாடுகளின் கீழ், கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களும் நகரத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.