
அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் வரும் 22 ஆம் தேதி பொதுப்பணி, நிதி மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்கள் பேச்சு வார்த்தை நடத்துகின்றனர்.

சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் வரும் 22 ஆம் தேதி பொதுப்பணி, நிதி மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்கள் பேச்சு வார்த்தை நடத்துகின்றனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, காலிப் பணியிடங்களை நிரப்புவது என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினா் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, பாஸ்கரன் செய்தியாளா்களிடம் பேசுகையில், எங்களின் 10 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாததால் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் லட்சக்கணக்கான ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள், அரசு பணியாளா்கள் ஒன்றிணைந்து உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனா்.
எங்களது நியாயமான கோரிக்கைகளை வென்றெடுக்க ஜன. 6-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தவுள்ளோம்.
காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் கூடுதலான ஆசிரியா்கள் மற்றும் அரசுப் பணியாளா்கள் பங்கேற்று போராட்டத்தை மேலும் வெற்றிபெறச் செய்வா் என்றாா்.
இந்த நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் வரும் 22 ஆம் தேதி பொதுப்பணி, நிதி மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்கள் பேச்சு வார்த்தை நடத்துகின்றன
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து வரும் 22 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை, தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10-வது தளத்தில் உள்ள ஆலோசனைக் கூடத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Summary
Meeting with Government Servants and Teachers
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


சொத்து விவரங்களை முதல்வர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களும் வெளியிட வேண்டும்: அன்புமணி
முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்: மைதானங்கள் குறித்த விவரங்கள் வெளியீடு





