திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்திருப்பது தொடர்பாக...
கோவை விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் .
கோவை விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் .
Updated on
2 min read

கோவை: திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை என கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பாஜக – அதிமுக கூட்டணி வலுவாக உள்ளது

கோவை, திருப்பூர் நகரங்களின் அடையாளம் அனைவருக்கும் தெரியும். ஆனால் தற்போது சிலர் புதிதாக “மஞ்சள் நகரம்” என்று கூறுகிறார்கள். பாஜக – அதிமுக கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. தமிழகத்தில் ஜனநாயகத்தின் குரல்வலை நெரிக்கப்பட்டு வருகிறது.

முதல்வர் பதில் சொல்ல வேண்டும்

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற போராட்டத்தில் பூரண சந்திரன் தனது உடலில் தீயை ஏற்றிக் கொண்டு உயிரிழந்துள்ளார். இந்த விவகாரத்திற்கு தமிழக முதல்வர் கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும். தூய்மைப் பணியாளர்களை கைது செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை.

அரசியல் தலைவர்கள் இரட்டை வாழ்க்கை

இந்த விவகாரத்தில் நீதிபதியையே குற்றம் சாட்டுவது தவறான போக்கு. திருப்பரங்குன்றம் தூண் குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் கூறப்படுகின்றன. முருகன் இரண்டு வாழ்க்கை வாழ்ந்ததாக சிலர் பேசுகிறார்கள்; அரசியல் தலைவர்கள் இரட்டை வாழ்க்கை வாழ்வது குறித்து பெண்ணாக நான் பேச முடியாது.

மஞ்சள் வாரியம்

2026 ஆம் ஆண்டு ஸ்டாலின் அரசு மக்கள் முன் பதில் சொல்லியே ஆக வேண்டும். “மஞ்சள் நகரம்” என்ற கருத்தை நடிகர் விஜய் முன்வைத்துள்ளார்; ஆனால் மஞ்சளுக்கான வாரியத்தை அமைத்தது மத்திய அரசு. மஞ்சள் நகரத்தில் உள்ள மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்.

விஜய் 10 வயதிலிருந்து மக்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறினால், 25 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் சேவை செய்துள்ள எங்களுக்கு எந்த அளவிற்கு மக்களுடன் தொடர்பு இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

காந்திக்கும் காங்கிரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை

திமுக மகாத்மா காந்தியை உரிய முறையில் கொண்டாடவில்லை. அறிவாலயத்தில் தேசியக் கொடி கூட ஏற்றவில்லை. மகாத்மா காந்தி ஊழல் அற்றவர்; ஆனால் வேலை வாய்ப்பு திட்டத்தில் ஊழல் நடந்தது தமிழ்நாட்டில்தான். காந்திக்கும் காங்கிரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

முற்போக்கு இயக்கங்கள் என்ற பெயரை மாற்றி, அவை பிற்போக்கு இயக்கங்கள் என சொல்ல வேண்டும். சரஸ்வதி நாகரிகம் வரலாற்றில் உள்ளது. அதிமுக அமைச்சர்கள் பாஜக தலைவர்களை சந்திப்பது நட்பின் அடையாளமே; அதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.

எதுகை, மோனையுடன் எழுதித் தருகிறார்கள்

குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது. தேர்தல் நேரம் என்பதால் வழக்குகள் போடப்படவில்லை என்றாலும், அவை எப்போதும் தொடரும். உதயநிதிக்கு புரிகிறதா இல்லையா என்பது தெரியவில்லை; எழுதித் தருபவர்கள் எதுகை, மோனையுடன் எழுதித் தருகிறார்கள்.

"தீய சக்தி திமுக" சரித்திரத்தில் எழுதப்பட்ட வார்த்தை

கருணாநிதி பெயரை அனைத்திற்கும் வைத்துள்ளனர்; சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களை வைக்கலாம். "தீய சக்தி திமுக" என்பது சரித்திரத்தில் எழுதப்பட்ட வார்த்தை. நான் அனைத்து மதங்களுக்கும் ஆதரவாக பேசுவேன்; ஆனால் பைபிளை பாராட்டி பகவத் கீதையை எதிர்ப்பது தவறு என அவர் கூறினார்.

Summary

The Thiruparankundram issue is not a religious problem; it is an ego problem says Tamilisai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com