பெரியாருக்கு புகழ் வணக்கம் செலுத்துவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

தந்தை பெரியாரின் நினைவு நாளையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பெரியார் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
பெரியார் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
Updated on
1 min read

தந்தை பெரியாரின் நினைவு நாளையொட்டி அவரது திருவுருப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தந்தை பெரியாரின் 52 ஆவது நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பெரியாரின் சிலை மற்றும் அவரது உருவப்படத்திற்கு பல்வேறு தரப்பினர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை ஓமந்தூரார் சிம்சன் சந்திப்பில் உள்ள பெரியார் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அமைச்சர்கள் மரியாதை செலுதினர்.

இதனிடையே, முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்க பதிவில், வளைந்து நின்ற முதுகுகள் தலைநிமிர்ந்து தன்மானம் காக்க, தன்னையே இந்த மண்ணுக்குத் தந்த தந்தை பெரியாருக்குப் புகழ் வணக்கம்!

தமிழர்கள் தலைகுனியாமல் - ஆதிக்கத்துக்கு அடிபணியாமல் - பகுத்தறிவுச் சிந்தனையோடு சக மனிதரை நேசித்துச் சமத்துவத்தைப் பேணுவதே, இனமானமே பெரிதென அவர் உழைத்த உழைப்புக்கு நாம் செலுத்தும் நன்றி!

பெரியார் எனும் பெருஞ்சூரியனைத் திருடவும் முடியாமல் தின்று செரிக்கவும் முடியாமல் திண்டாடும் பகைவர் கூட்டத்தின் வஞ்சக எண்ணங்களை வீழ்த்திட ஒற்றுமை உணர்வோடு ஓரணியில் தமிழ்நாடு நின்றால், என்றும் வெற்றி நமதே! என அவர் குறிப்பிட்டுள்ளார்.

On the occasion of Periyar's 52nd death anniversary, Chief Minister M.K. Stalin paid his respects by laying flowers at his portrait.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com