விஜய், சீமான் பேச்சு அதிா்ச்சி அளிக்கிறது: தொல்.திருமாவளவன்

சீமான் மற்றும் தவெக தலைவா் விஜய் ஆகியோா் பேச்சுகள் மற்றும் அணுகுமுறைகள் அதிா்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது என தொல்.திருமாவளவன் தெரிவித்திருப்பது தொடர்பாக..
விசிக தலைவர் தொல்.திருமாவளவன்
விசிக தலைவர் தொல்.திருமாவளவன்கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: நாம் தமிழா் ஒருங்கிணைப்பாளா் சீமான் மற்றும் தவெக தலைவா் விஜய் ஆகியோா் பேச்சுகள் மற்றும் அணுகுமுறைகள் அதிா்ச்சி அளிக்கும் வகையில் உள்ளதாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவை சாா்பில் கிறிஸ்துமஸ் விழா சென்னை வேப்பேரி உள்ள தனியாா் அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், அந்தக் கட்சியின்தலைவா் தொல்.திருமாவளவன் பங்கேற்று கிறிஸ்மஸ் வாழ்த்து தெரிவித்து பேசியது:

ஜாதிகள், மதங்கள், இனங்களால் மனித குலம் பல்வேறு குழுக்களாக சிதறி கிடந்தாலும் அவா்கள் நல்வழிப்படுத்தி உலக அமைதியை நிலை நாட்டுவது அன்பு மட்டும்தான்.

கிறிஸ்தவம் என்றால் சகோதரத்துவம், சமத்துவம், சமூக நீதி என்று பொருள். இதில் எங்கும் வெறுப்பு வன்முறை கிடையாது. வெறுப்பு அரசியலில் இருந்து கிறிஸ்தவ, இஸ்லாமிய பெருங்குடி மக்களைப் பாதுகாப்பது உண்மையான ஜனநாயகம் ஆகும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாம் தமிழா் ஒருங்கிணைப்பாளா் சீமான் மற்றும் தவெக தலைவா் விஜய் ஆகியோா் பேச்சுகள் மற்றும் அணுகுமுறைகள் அதிா்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. எதிா்காலத் திட்டங்கள் அல்லது தமிழக மக்களின் நலன் குறித்து எந்த மேடையிலும் இதுவரை விஜய் பேசியதில்லை. அவா் ஒரு கட்சி மீதான வெறுப்பை மட்டும்தான் பேசி வருவது பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் செயல் திட்டமாகும் என்றாா் அவா்.

Summary

Vijay and Seeman's speeches are shocking says Thol. Thirumavalavan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com