பகுத்தறிவுப் பாதைக்கு வித்திட்ட சுடரொளி பெரியார்: எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி!

தமிழ்நாட்டின் பகுத்தறிவுப் பாதைக்கு வித்திட்ட சுடரொளி பெரியார் என அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி புகழஞ்சலி
 பெரியார்
பெரியார்
Updated on
1 min read

தமிழ்நாட்டின் பகுத்தறிவுப் பாதைக்கு வித்திட்ட சுடரொளி பெரியார் என தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

தமிழகத்தில் சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்திய பெரியார் ஈ.வெ.ராமசாமியின் 52 ஆவது நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி பெரியாரின் சிலை மற்றும் அவரது உருவப்படத்திற்கு பல்வேறு தரப்பினர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்போடி கே.பழனிசாமி தனது எக்ஸ் பக்க பதிவில்,

ஆதிக்கத்தின் அனைத்து வடிவங்களையும் சுட்டெரித்த பேரொளி, தமிழ்நாட்டின் பகுத்தறிவுப் பாதைக்கு வித்திட்ட சுடரொளி,

திராவிட இயக்கத்தின் அறிவொளி தந்தைப் பெரியார் அவர்களின் நினைவு நாளான இன்று, மனிதம் போற்றும் உன்னதக் கோட்பாடாம் திராவிடத்தின் உயரிய விழுமியங்களோடு, சமூகநீதிப் பாதையில் தொடர்ந்து பயணிக்க உறுதியேற்போம்! என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Periyar, the radiant light who paved the way for rationalism says Edappadi Palaniswami

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com