

ஆம்பூா்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை நிறுத்திவிட்டு வேறு பெயரில் புதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ள மத்திய பாஜக அரசை கண்டித்து திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மாதனூரில் ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன் தலைமையில் திமுக கூட்டணி சார்பாக மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை கைவிட்டு, புதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ள மத்திய அரசையும், அதற்கு துணை போன அதிமுகவையும் கண்டித்து வரும் டிச.24-ஆம் தேதி திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் திமுக தலைமையில் அதன் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆா்ப்பாட்டம் நடத்த அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை நிறுத்திவிட்டு வேறு பெயரில் புதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ள மத்திய பாஜக அரசை கண்டித்து திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மாதனூரில் ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன் தலைமையில் திமுக கூட்டணி சார்பாக மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஏராளமான பெண்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு துணையாக செல்லும் அதிமுகவிற்கு எதிராகவும் கோஷமிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.