

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலக நன்மைக்காகவும் உலக மாந்தர் அனைவரும் நலமுடன் வாழவும் தேவாலங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.
இயேசுபிரான் பூமியில் அவதரித்த கிறிஸ்துமஸ் பெருவிழாவாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கிறிஸ்துமஸ் விழா வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே சிறப்பு பிரார்த்தனைகள் கிறிஸ்துவ மக்களின் வீடுகளுக்கு சென்று இயேசுவின் பிறப்பை பற்றிய பாடல்கள் பாடி மகிழ்ச்சியை பகிர்ந்து வந்தனர்.
அந்த வகையில் இயேசு பிரான் பிறந்த நாளான டிசம்பர் 25 உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், சென்னை சாந்தோமில் அமைந்திருக்கும் வரலாற்று சிறப்புமிக்க புனித தோமையார் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனை நடைபெற்றது. ஆயிரக்கனக்கான கிறிஸ்தவ மக்கள் புத்தாடை அணிந்து குடும்பத்துடன் பங்கேற்று உலக மக்களின் நன்மைக்காக பிரார்த்தனை செய்தனர்.
மேலும், ஒருவருக்கொருவர் கைகுலுக்கி தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர். மேலும் குறிப்பாக சென்னை சாந்தோம் புனித தோமையார் தேசிய தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி 25 அடி உயர கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டிருந்தது. பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி கிறிஸ்துமஸ் நிகழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. தொடர்ந்து கிறிஸ்துமஸ் கேக் வெட்டி பகிர்ந்தளிக்கப்பட்டது.
சமய வேறுபாடுகளைக் கடந்து கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுவதாக பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி கூறுகையில், இயேசுவின் வருகையால் மனித குலத்திடம் அமைதி, மகிழ்ச்சி, அன்பு, நம்பிக்கை பிறக்கிறது. சமய வேறுபாடுகளை கடந்து கிறிஸ்துமஸ் விழா கொண்டாடபட்டது. உலக மக்கள் அமைதி, சமாதானம் பெற பிரார்த்தனை என்றார்.
தேவாலயத்திற்கு வந்திருந்தவர்கள் கூறுகையில், கிறிஸ்துமஸ் விழாவை ஒரு மாதமாக கொண்டாடி வருகிறோம். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பகிர்ந்து கொள்வதாகவும், கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.