களைகட்டிய கிறிஸ்துமஸ்: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை!

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது குறித்து...
சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை
சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை படம் - DNS
Updated on
1 min read

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

வீடுகளிலும் கிறிஸ்துமஸ் மரங்கள், நட்சத்திரங்கள் வைத்து கேக் வெட்டி, பாடல்கள் பாடி இயேசு பிறப்பை கிறிஸ்தவர்கள் கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சென்னை பெசன்ட் நகரில் உள்ள தேவாலயத்தில் பாரம்பரிய முறைப்படி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. சென்னை சாந்தோம் தாமஸ் பசிலிக்கா ஆலயத்தில் கூட்டம் கூட்டமாக மக்கள் கூடி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இதேபோன்று, நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர்.

மதுரை தூய மரியன்னை தேவாலயத்தில் ஆண்கள், பெண்கள் என பலரும் குடும்பத்துடன் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். தூத்துக்குடி பனிமய மாதா கோயிலிலும் வண்ண விளக்குகளால் தேவாலயம் அலங்கரிக்கப்பட்டு கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி ஒயிட் டவுன் பகுதியில் உள்ள கப்ஸ் தேவாலயத்தில் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மூன்று மொழிகளில் பிரார்த்தனை நடைபெற்றது.

தலைநகரான தில்லி சேக்ரட் ஹார்ட் கதீட்ரல் தேவாலயத்தில் கடும் குளிரிலும் ஏராளமானோர் பங்கேற்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதேபோன்று தில்லியின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் கடும் குளிருக்கு மத்தியிலும் உற்சாகத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை
கிறிஸ்துமஸ்: சென்னை மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!
Summary

Christmas celebrations in full swing Special prayers held in churches!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com