பள்ளிக் கல்வித் துறை சார்பில், திருவண்ணாமலை மாநகரில் ரூ. 56 கோடியே 47 லட்சத்து 20 ஆயிரம் செலவில் அரசு மாதிரி பள்ளிக் கட்டடம் மற்றும் ஆண்கள், பெண்கள் விடுதிகள், போளூர், வடமாதிமங்கலம், வடிஇலுப்பை, தச்சூர், நாரையூர், மாமண்டூர், இளங்காடு, வெளுங்கனந்தல் ஆகிய அரசு மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகள், அரசுவெளி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் ரூ.22 கோடியே 73 லட்சத்து 95 ஆயிரம் செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், கழிவறைகள் மற்றும் கண்ணமங்கலம், மடம், ஆணைபோகி ஆகிய இடங்களில் ரூ.66 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கிளை நூலக கட்டடம், புதிய ஊர்ப்புற நூலகக் கட்டடங்கள்; நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், திருவண்ணாமலை-அரூர் சாலை, ஆற்காடு-திண்டிவனம் சாலை, காஞ்சிபுரம்- திருவத்திபுரம் சாலை ஆகிய இடங்களில் ரூ.161 கோடியே 90 லட்சம் செலவில் இருவழித்தடத்திலிருந்து அகலப்படுத்தப்பட்ட நான்கு வழித்தட சாலைகள்; நீர்வளத் துறை சார்பில், காமக்கூர் ஊராட்சி – கமண்டல நாகநதி, படிஅக்ரஹாரம் ஊராட்சி-செய்யாறு, செங்கம் நகரம்-செய்யாறு, மேல்கொடுங்கலூர் ஊராட்சி-சுகநதி, ரெட்டியார்பாளையம்-பாம்பானாறு, தொழுப்பேடு-செய்யாறு, அம்மாபாளையம் ஊராட்சி-நாகநதி ஆகிய இடங்களில் ரூ.35 கோடியே ஒரு லட்சத்து 82 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள், தண்டராம்பட்டு வட்டம்-ரெட்டியார்பாளையம் ஊராட்சி, சாத்தனூர் அணையில் ரூ.15 கோடியே 5 லட்சத்து 93 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள பணியாளர்கள் குடியிருப்பு மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி; ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.127 கோடியே 20 லட்சத்து 32 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணைசுகாதார நிலையங்கள், உயர்மட்டப் பாலங்கள் முதலிய 243 முடிவுற்றப் பணிகள் உட்பட மொத்தம் ரூ. 571 கோடியே 96 லட்சத்து 69 ஆயிரம் செலவிலான 312 திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.