
தமிழக வெற்றிக்கழகத்தின் 2 ஆம் ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு கொள்கைத் தலைவர்களின் சிலைகளை விஜய் திறந்து வைத்தார்.
தமிழக வெற்றிக்கழகத்தின் 2 ஆம் ஆண்டு தொடக்க விழா பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தவெக தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.
தவெக தலைமை அலுவலகத்துக்கு வருகைதந்த விஜய், தவெக கட்சிக் கொடியினை ஏற்றினார்.
இதையும் படிக்க: திமுகவை எதிர்க்கும் துணிவின்றி மறைமுக யுத்தம்: முதல்வர்
பின்னர், தவெகவின் கொள்கைத் தலைவர்களான பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் உள்ளிட்டோரின் சிலைகளை தவெக தலைவர் விஜய் திறந்து வைத்தார்.
தொடர்ந்து, திறக்கப்பட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து நலத்திட்டங்களை வழங்கும் விழாவில் பங்கேற்கிறார்.
5ஆம் தவெக மாவட்ட நிர்வாகிகளின் பட்டியலை விஜய் இன்று வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.