இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ?: அண்ணாமலை கேள்வி

நம் சகோதரிகளுக்கு பாதுகாப்பான சூழலை அதிகாரிகள் உறுதி செய்வதற்கு முன்பு இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ..?
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
Published on
Updated on
1 min read

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்த பெண்ணுக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையால் அந்த பெண்ணின் அலறல் சப்தம் கேட்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்த நல்லவர் ஒருவரால், அந்த பெண் உயிர்தப்பிய நிலையில், நம் சகோதரிகளுக்கு பாதுகாப்பான சூழலை அதிகாரிகள் உறுதி செய்வதற்கு முன்பு இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ..? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டிருப்பதாவது:

கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திற்கு வெளியே 18 வயது இளம்பெண் ஒரு ஆட்டோவில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். உதவி கேட்டு சத்தமிட்ட அந்த இளம்பெண்ணின் அலறல் சப்தம் கேட்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்த அந்த ஒரு நல்ல மனிதரால் அந்த பெண் காப்பற்றப்பட்டார்.

தமிழ்நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை என்பது சாதாரணமாகிவிட்டது. போதைப் பொருள் எளிதில் கிடைக்கூடிய பொருளாக மாறிவிட்டது.

இருப்பினும், தமிழ்நாட்டில் போதைப் பொருள் தடுப்பு வழக்கில் கடந்த 2021 இல் மட்டும் 9,632 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில், 2022 மற்றும் 2024-க்கு இடையில், கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1122 மட்டுமே.

தமிழ்நாட்டில் கஞ்சா மற்றும் மெத்தம்பேட்டமைன் போன்ற போதைப் பொருள்கள் விற்பனை அதிகரித்து வருகிறது, ஆனால் கைதுகள் மட்டும் குறைந்து வருவது எப்படி?

குறைவான அளவில் போதைப் பொருள் தொடர்பான கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம், போதைப் பொருள் கடத்தல்காரர்கள் சுதந்திரமாக திரிவதற்காகவே தமிழக அரசு வேண்டுமென்றே மெத்தனமாகிவிட்டதா? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் போதைப் பொருள்கள் விற்பனை அதிகரித்துள்ளதால் தான் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், நம் சகோதரிகளுக்கு பாதுகாப்பான சூழலை அதிகாரிகள் உறுதி செய்வதற்கு முன்பு இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ??? என அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com