தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்! சாதனை படைத்த ரஷீத்கான்!

டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி ரஷீத்கான் புதிய சாதனை படைத்துள்ளார்.

News image
Updated On :5 பிப்ரவரி 2025, 6:30 am

DIN

டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி ரஷீத்கான் புதிய சாதனை படைத்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரஷீத் கான், ஐபிஎல், பிபிஎல், சிபிஎல், பிக்-பாஸ் உள்ளிட்ட அனைத்து டி20 லீக் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். இவர் தற்போது மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் டுவைன் பிராவோவை முந்தி டி20 போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.

தென்னப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர் போட்டியில் ரஷீத் கான் இந்தச் சாதனையை நிகழ்த்தினார். இந்தப் போட்டியின் போது, ​​ரஷீத் கான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதுவரை 461 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரஷீத் கான் 633* விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில், நான்கு முறை 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் மற்றும் பல அணிகளுக்காக விளையாடியுள்ள பிராவோவின் 18 ஆண்டுகால டி20 கிரிக்கெட் வாழ்க்கையில் 631 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் அவரது டி20 கிரிக்கெட் வாழ்க்கையில் 3 முறை ஐந்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் சுழற்பந்து வீச்சாளரும் ஆல்ரவுண்டருமான சுனில் நரைன் (574 விக்கெட்டுகள் 536 போட்டிகளிலும், தென்னாப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் 428 போட்டிகளில் 531 விக்கெட்டுகளும், வங்கதேச ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் (444 போட்டிகளில் 492 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.

26 வயதான ரஷீத் கான் இதே ஃபார்மில் விளையாடும் பட்சத்தில் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 1000 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற புதிய சாதனையும் படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.