ஜந்தர் மந்தர் போராட்டத்தில் காவலர்களால் பாலியல் சீண்டல்; 3 பெண் பத்திரிகையாளர்கள் புகார்!ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் சிறைப்பிடிப்பு! வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு - காங்கிரஸ்மூலனூர் வஞ்சியம்மன் கோயிலில் முதல்வர் விஜய் இன்று சாமி தரிசனம்?இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் இஸ்ரேல் பிரதமர் உரையாடல்! உலக நாயகன் என புகழாரம்!தாராபுரம் பிரசாரம்: உதயநிதி மீது வழக்குப் பதிவு!தமிழ்நாட்டின் கடலோரத்தில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவு ஏற்படலாம்! மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு! கோவை, நீலகிரி, தேனியில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு

ரூ.7 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல்! 3 பேர் கைது!

அசாமில் ரூ.7 கோடி அளவிலான போதை மாத்திரைகள் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

போதை மாத்திரைகள் (கோப்புப் படம்)

Published On :

வடகிழக்கு மாநிலமான அசாமில் ரூ.7 கோடி அளவிலான தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகளை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா தெரிவித்துள்ளார்.

அசாமின் ஸ்ரீபூமி மாவட்டத்தின் புவாமாறா பகுதியில் காவல் துறையினர் நடத்திய சோதனையில் 50,000க்கும் மேற்பட்ட தடைசெய்யப்பட்ட யாபா எனப்படும் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், இதேப்போல் லோங்காய் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 5,800 யாபா மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 2 பேர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:

மதிப்பிற்குறிய போதைப் பொருள் கடத்தல் காரர்களே, உங்களது கேளிக்கை விருந்தைக் கெடுத்ததிற்காக ஸ்ரீபூமி காவல் துறையினரின் சார்பில் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், உங்களது ரூ.7 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் இன்று (பிப்.8) காலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, நாங்கள் தொடர்ந்து உங்களது கேளிக்கை விருந்துக்களை கெடுப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, மெத்தபெட்டமைன் மற்றும் கேப்பைன் ஆகிய மூலப் பொருள்களினால் தயாரிக்கப்படும் யாபா போதை மாத்திரைகள் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.