மின் கட்டணம், விலைவாசியைப் பார்த்துவிட்டு வாக்களியுங்கள்: தாராபுரம், மதுராந்தகம் மக்களுக்கு மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் ஜந்தர் மந்தர் போராட்டத்தில் காவலர்களால் பாலியல் சீண்டல்; 3 பெண் பத்திரிகையாளர்கள் புகார்!ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் சிறைப்பிடிப்பு! வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு - காங்கிரஸ்மூலனூர் வஞ்சியம்மன் கோயிலில் முதல்வர் விஜய் இன்று சாமி தரிசனம்?இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் இஸ்ரேல் பிரதமர் உரையாடல்! உலக நாயகன் என புகழாரம்!தாராபுரம் பிரசாரம்: உதயநிதி மீது வழக்குப் பதிவு!தமிழ்நாட்டின் கடலோரத்தில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவு ஏற்படலாம்! மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு! கோவை, நீலகிரி, தேனியில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு

நல்லாட்சிக்குக் கிடைத்த மகத்தான வெற்றி: பிரதமர் மோடி!

தில்லி மக்களுக்கு நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடி..

பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப் படம்)

Published On :

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் பாஜக அமோக வெற்றி பெற்றதையடுத்து, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை அளித்த தில்லி மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

70 தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு பிப். 5ல் நடைபெற்ற தோ்தலில் 60.54 சதவீதம் வாக்குகள் பதிவானதையடுத்து, பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (பிப்.8) காலை 8 மணிக்குத் தொடங்கியது. மொத்தம் 13 சுற்றுகளாகத் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டது.

இந்த நிலையில், பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மாவை எதிர்த்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தோல்வியைத் தழுவியுள்ளார்.

பாஜகவின் பர்வேஷ் வர்மாவிடம் 4,089 வாக்குகள் வித்தியாசத்தில் கேஜரிவால் தோல்வியடைந்தார். பர்வேஷ் 30,088 வாக்குகள், ஆம் ஆத்மி அரவிந்த் கேஜரிவால் 25,999 வாக்குகள் பெற்றுள்ளார்.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 48 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 22 இடங்களிலும் முன்னிலை பெற்ற நிலையில், பாஜக வெற்றி பெற்றதாகவும், ஆத் ஆத்மி கட்சி தோல்வியைச் சந்தித்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

பாஜகவின் நல்லாட்சிக்குக் கிடைத்த வெற்றி. இந்த மகத்தான, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு தில்லி சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தில்லியின் வளர்ச்சியிலும், மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும், வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் தில்லிக்கு முக்கிய பங்கு இருப்பதை உறுதி செய்வதில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.

மாபெரும் வெற்றிக்காக இரவு பகலாக உழைத்த பாஜக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன். நாங்கள் மேலும் கடினமாக உழைத்து தில்லி மக்களுக்கு சேவை செய்வோம் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.