
பிரிக்ஸ் மாநாடு: பிரதமருக்கு நன்றி தெரிவித்த உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர்!
பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி அளித்த வரவேற்புக்கு உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் நன்றி தெரிவித்திருப்பது குறித்து...

பிரதமர் நரேந்திர மோடியுடன் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் உள்ளிட்ட சிலர். - படம் - எக்ஸ்
பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி அளித்த வரவேற்புக்கு உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
உலகின் முக்கிய 11 பெரிய பொருளாதார சக்திமிக்க நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பின் 18 ஆவது உச்சி மாநாடு தலைநகர் தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நேற்று தொடங்கி இன்றுடன் நிறைவடைய உள்ளது.
இந்த மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவா்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்ட நிலையில், 140 அம்சங்களைக் கொண்ட 45 பக்க பிரகடன ஆவணம் சனிக்கிழமை வெளியிடப்பட்டு அது அனைத்து தலைவர்களாலும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் சனிக்கிழமை (செப். 12) இந்தியா வந்தடைந்தார். அவரை பிரதமர் நரேந்திர மோடி நேரில் வரவேற்றார்.
இதுதொடர்பாக டெட்ரோஸ் அதானோம் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
தில்லியில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி அளித்த அன்பான வரவேற்புக்கு நன்றி.
உலக சுகாதார நிறுவனத்துக்கு பிரிக்ஸ் தலைவர்கள் அளிக்கும் வலுவான ஆதரவு பிரகடனத்தில் பிரதிபலிக்கிறது. அந்த வகையில், அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு, மீள்திறன் கொண்ட சுகாதார அமைப்புகள், பெருந்தொற்று ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முடித்தல், காசநோயை ஒழிப்பதற்கான முயற்சிகள், சுகாதாரப் பணியாளர்களை வலுப்படுத்துதல், டிஜிட்டல் சுகாதாரம், பாரம்பரிய மருத்துவத்தை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட கருத்துகள் பிரடகடனத்தில் இடம்பெற்றிருப்பதை நான் பாராட்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
Prime Minister @narendramodi, thank you for the warm welcome to the 2026 #BRICS Delhi Summit. ð
— Tedros Adhanom Ghebreyesus (@DrTedros) September 13, 2026
I very much appreciate the BRICS Leadersâ strong support for @WHO and multilateralism, and the commitment, as reflected in the declaration, to universal health coverage, resilient⦠pic.twitter.com/YXv72HhwMM
Summary
World Health Organization Director-General Tedros Adhanom Ghebreyesus has thanked Prime Minister Modi for the welcome extended at the BRICS summit.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


சுதந்திரமான கப்பல் போக்குவரத்து, மாலுமிகளின் பாதுகாப்பு முக்கியம்: பிரிக்ஸ் வா்த்தக அமைப்பு கூட்டத்தில் பிரதமா் மோடி வலியுறுத்தல்

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்த ரஷிய அதிபர் விளாதிமீா் புதின் - புகைப்படங்கள்





