
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் பிறந்தநாளையொட்டி இன்று (பிப்.9) கொல்கத்தா நகரத்தில் அமைதிப் பேரணி நடத்தப்பட்டுள்ளது.
கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். அவரது பிறந்த நாளான இன்று (பிப்.9) கொல்கத்தாவில் அனைத்துத் தரப்பு மக்களும் இணைந்து அமைதிப் பேரணி நடத்தினர். மேலும், இன்றுடன் அவரது கொலை நடந்து 6 மாதங்கள் நிறைவடைகின்றது.
கல்கத்தா பல்கலைக்கழக வளாகத்தில் துவங்கியுள்ள இந்த அமைதிப் பேரணியானது சுமார் 5 கி.மீ. தூரத்தைக் கடந்து சம்பவம் நடந்த ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் நிறைவடையும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: மகா கும்பமேளா: குடியரசுத் தலைவர் நாளை புனித நீராடல்!
இந்நிலையில், ’அபயா மஞ்ச்’ என அழைக்கப்படும் இந்தப் பேரணியில் ஏராளமான மருத்துவர்கள் உள்பட அனைத்துத் தரப்பு மக்களும் தங்களது வாயில் கருப்பு நிற துணியை கட்டிக்கொண்டு, அப்பெண்ணுக்கு நீதி வேண்டி கையில் பதாகைகளுடன் பங்குபெற்றுள்ளனர்.
மேலும், மேற்கு வங்கத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை (பிப்.10) முதல் நடைபெறவுள்ள காரணத்தினால் இது அமைதிப் பேரணியாக நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.