பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவிந்திராவுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நேற்று (பிப்ரவரி 8) தொடங்கியது.
இந்தத் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த நியூ. அணி 331 ரன்களை இலக்கு வைத்தது. அதிகபட்சமான கிளன் பிலிஃப்ஸ் 101 ரன்கள் அடித்தார்.
இதையும் படிக்க: அல்கராஸ், டி மினாா் வெற்றி, சிட்ஸிபாஸ் தோல்வி
தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 252 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகி 78 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோற்றது.
இதற்கிடையே, நியூசிலாந்து அணி பந்துவீசும்போது பீல்டிங் செய்து கொண்டிருந்த ரச்சின் ரவீந்திரா, இன்னிங்ஸின் 38-வது ஓவரில் பாக். வீரர் குஷ்தில் அடித்த பந்தை கேட்ச் பிடிக்க முயன்றார். ஆனால், பந்து அவரது கைகளுக்கு மேலே சென்று நெற்றியில் பலமாக தாக்கியது. இதனால், நிலைகுலைந்த ரச்சின் அதே இடத்திலேயே அமர்ந்தபடி இருக்க, அவரது நெற்றியிலிருந்து அதிகமாக ரத்தம் வெளியேறியது.
பின், உடனடியாக மைதானத்திலிருந்து ரச்சின் பாதுகாப்பாக அழைத்துவரப்பட்டார். தொடர்ந்து, அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இரவில் பாகிஸ்தான் மைதானத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால்தான் ரச்சினுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருவதால் சர்ச்சை எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.