அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது! ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

எந்த நிபந்தனையும் இல்லாமல் அதிமுகவில் இணையத் தயார்: ஓபிஎஸ்

அதிமுகவில் ஓபிஎஸ் இணைவது தொடர்பாக...

News image

ஓபிஎஸ்(கோப்புப்படம்)

Updated On :13 பிப்ரவரி 2025, 3:05 pm IST

எந்த நிபந்தனையும் இல்லாமல் நான், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் அதிமுகவில் இணையத் தயாராக இருக்கிறோம் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தேனியில் ஓ. பன்னீர் செல்வம் பேசியதாவது:

”வரும் 2026 பேரவைத் தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்தால் வாழ்வு, இல்ல்லையென்றால் அனைவருக்கும் தாழ்வே.

செங்கோட்டையன் அதிமுகவுக்கு விசுவாசமானவர், அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நினைப்பவர். அவர் மீது எங்களுக்கு எந்தவித அதிருப்தியும் இல்லை.

எந்த நிபந்தனையும் இல்லாமல் நான், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் அதிமுகவில் இணையத் தயாராக இருக்கிறோம்.

அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு ஜெயலலிதாவைத் தவிர வேறு யாரும் உரிமை கோர முடியாது; மற்றபடி எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கிறாரா என்பதற்கு செங்கோட்டையன்தான் பதில் சொல்ல வேண்டும்.” என்று பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.