
சென்னை: எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் மறுவுருவமாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு மறைமுகமாக ஆர்.பி. உதயகுமார் பதிலளித்துள்ளார்.
மேலும், அதிமுகவுக்கு கிடைத்த இறையருள்தான் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை காப்பாற்றியவர் இபிஎஸ். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுகவை மீட்டெடுத்து இயக்கத்தைக் காப்பாற்றியவர் எடப்பாடி பழனிசாமி என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியிருக்கிறார்.
ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டிருக்கும் விடியோவில், மக்கள் சக்திதான் ஒரு இயக்கத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும். அதிமுகவுக்கு வரும் சோதனைகளை தொண்டர்கள் மன வலிமையுடன் எதிர்கொள்ள வேண்டும். களத்தில் மக்களை சந்தித்து உண்மைகளை எடுத்துச் சொல்வோம். அதிமுகவுக்கு கிடைத்த இறையருள்தான் எடப்பாடி பழனிசாமி. எதிரிகள் மற்றும் துரோதிகளின் வாதங்களால் அதிமுகவை அசைக்க முடியாது என்று விடியோ மூலம் ஆர்.பி. உதயகுமார் கூறியருக்கிறார்.
செங்கோட்டையனுக்கு மறைமுக பதில்
இபிஎஸ் பாராட்டு விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் படங்கள் இல்லை என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்த நிலையில், ஆர்.பி. உதயகுமார் இந்த விடியோவை வெளியிட்டிருக்கிறார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை சுற்றி சர்ச்சை எழுந்த நிலையில் இந்த விடியோ மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.