
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகளுக்கு எதிரான தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
ஜம்முவில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் உள்ளதாக சந்தேகிக்கப்படும் பல்வேறு இடங்களில் இன்று (பிப்.22) பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளதாகவும் தற்போது வரையில் எந்தவொரு தீவிரவாதியும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், அம்மாநிலத்தின் பூஞ்ச், ராஜௌரி, உதம்பூர், கதூவா ஆகிய மாவட்ட பகுதிகளிலும் தோதா மற்றும் கிஷ்த்வார் மலைத் தொடர்களிலும், ஜம்முவிலுள்ள இந்திய எல்லைக் கோடு (எல்.ஓ.சி) பகுதிகளின் அருகிலுள்ள காடுகளிலும் தீவிரவாதிகளை பிடிக்க பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிக்க: பிரதமர் மோடி மூன்று மடங்கு அதிகமாக உழைக்கிறார்: மத்திய அமைச்சர்
முன்னதாக, நேற்று (பிப்.21) இரவு பூஞ்ச் மாவட்டத்தில் சந்தேகிக்கப்படும் விதத்தில் இரண்டு வெளிநாட்டினர் சுற்றித் திரிந்ததாகக் கூறப்பட்டதினால் இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதனைத் தொடர்ந்து, பூஞ்ச் - ராஜௌரி மாவட்டத்தின் 13 இடங்களிலும், உதம்பூரின் 18 இடங்களிலும், காதெரான் வனப்பகுதிகளிலும் இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக் கூறப்பட்டுள்ளது. மேலும், ஜம்முவின் அக்நூர் வட்டாரத்திலுள்ள கேரி, பட்டால் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்புப் படையினர் சோதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.