

ஜம்மு-காஷ்மீரின் சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ட்ரோன் காணப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர்.
ஜம்மு-காஷ்மீரின் சம்பாவில் உள்ள சில்யரி கிராமத்திற்கு அருகிலுள்ள சர்வதேச எல்லையில் பாகிஸ்தானைச் சேர்ந்ததாக சந்தேகிக்கப்படும் ட்ரோன் சனிக்கிழமை பறந்ததாகத் தெரிகிறது. இதைத்தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர்.
சர்வதே எல்லை வழியாக சில நிமிடங்கள் சுற்றிய ட்ரோன், பின்னர் பாகிஸ்தானை நோக்கித் திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ட்ரோன் தென்பட்டதையடுத்து சில்யரி கிராமத்திலும் அருகிலுள்ள பகுதிகளிலும் போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ட்ரோன் மூலம் ஆயுதங்கள் அல்லது போதைப்பொருட்கள் ஏதேனும் வீசப்பட்டதா என்பதை உறுதி செய்ய எல்லையின் பல்வேறு பகுதிகளை அவர்கள் ஆய்வு செய்ததாக அதிகாரிகள் மேலும் கூறினர். முன்னதாக வெள்ளிக்கிழமை, பாகிஸ்தானில் இருந்து வந்ததாக சந்தேகிக்கப்படும் ட்ரோன் சம்பா மாவட்டத்தில் உள்ள ரத்தன்பூர் கிராமத்தில் சிறிது நேரம் பறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.