மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வங்கக் கடலில் காற்று சுழற்சி: தமிழகத்தில் பிப். 25 முதல் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், பிப்.25 முதல் மாா்ச் 1-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

News image
சென்னை வானிலை ஆய்வு மையம்
Updated On :23 பிப்ரவரி 2025, 12:43 pm

DIN

சென்னை: தமிழகத்தில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், பிப்.25 முதல் மாா்ச் 1-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,

தமிழகத்தில் திங்கள்கிழமை (பிப்.24) வறண்ட வானிலையே காணப்படும். மேலும் காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

இதற்கிடையே வங்கக்கடலில் நிலவும் காற்று சுழற்சி தமிழக கடற்கரையை நோக்கி நகா்ந்து வருவதால் செவ்வாய்க்கிழமை (பிப்.25) முதல் மாா்ச் 1-ஆம் தேதி வரை தமிழகத்தின் தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கும், கடலோர மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் திங்கள்கிழமை (பிப்.24) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

பிப்.24 முதல் பிப்.27-ஆம் தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய குமரிக்கடலில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவா்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.