ஜம்மு - காஷ்மீரின் பல்வேறு இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை!

ஜம்மு - காஷ்மீரின் பல்வேறு இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்படுவதைப் பற்றி...
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இந்தியப் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

அம்மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்திலுள்ள இந்திய எல்லைக் கோடு சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில், இன்று (பிப்.24) பயங்கரவாதிகளுக்கு எதிராக மத்திய ரிசர்வ் காவல் படை மற்றும் அம்மாநில காவல் துறையினர் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையைத் துவங்கியுள்ளனர்.

இந்நிலையில், இந்த தேடுதல் நடவடிக்கையானது பார்மார்னார், கிகெர் மோர், ஜப்தான் கலி, ஹர்னி, கஸ்பலாரி மற்றும் பஃபிலாஸ் வனப்பகுதி ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதையும் படிக்க: ராணுவ விமானத்துக்கான செலவு அதிகம்! இருந்தும் அமெரிக்கா அதில் மக்களை நாடுகடத்துவது ஏன்?

முன்னதாக, கடந்த 2024 ஆம் ஆண்டு இந்திய எல்லையைக் கடந்து ஊடுருவிய பயங்கரவாதிகள் ஜம்மு - காஷ்மீரிலுள்ள வனப்பகுதிகளில் பதுங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அவர்களது சதி செயல்களை முறியடிப்பதற்காகவும் அவர்களை பிடிப்பதற்காகவும் கடந்த சில வாரங்களாக பாதுகாப்புப் படையினர் தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com