கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தமிழர்கள் ஹிந்தி கற்றுக்கொள்வது புத்திசாலித்தனம்: ஸ்ரீதர் வேம்பு

வணிகரீதியான வளர்ச்சிக்கு பொறியாளர்கள், தொழில்முனைவோர் ஹிந்தி கற்றுக்கொள்வது அவசியம் என ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.

News image

Zoho

Updated On :26 பிப்ரவரி 2025, 6:07 am

DIN

வணிகரீதியான வளர்ச்சிக்கு பொறியாளர்கள், தொழில்முனைவோர்கள் ஹிந்தி கற்றுக்கொள்வது அவசியம் என ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.

தில்லி, மும்பையில் பணியாற்றும் ஸோஹோ நிறுவன பொறியாளர்கள் மத்தியில் பேசிய ஸ்ரீதர் வேம்பு, தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் இருந்து வந்து பணிபுரியும் பொறியாளர்களுக்கு ஹிந்தி தெரியாமல் இருப்பது குறை என்றும் ஹிந்தி கற்றுக்கொள்வது புத்திசாலித்தனம் என்றும் கூறியுள்ளார்.

"இந்தியாவில் ஸோஹோ நிறுவனம் வேகமாக வளர்ந்து வருவதால், மும்பை, தில்லியில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராமப்புற பொறியாளர்கள் இருக்கிறார்கள். எங்கள் வணிகத்தின் பெரும்பகுதி, தில்லி, மும்பை, குஜராத்தில் இருந்து நடைபெறுகிறது. எனவே, வணிக வளர்ச்சிக்கு ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் ஹிந்தி கற்றுக்கொள்ளாததது எங்களுக்கு கடுமையான குறைபாடாகும்.

ஹிந்தி கற்றுக்கொள்வது புத்திசாலித்தனம். கடந்த 5 ஆண்டுகளில் நான் இடைவிடாமல் ஹிந்தியை கற்றுக்கொண்டேன். இப்போது ஹிந்தியில் பேசப்படும் விஷயங்களில் சுமார் 20% என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இந்தியாவில் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் உள்ள பொறியாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும்' என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.