
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தோதா மாவட்டத்திலுள்ள விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்த 3 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.
ஜம்முவைச் சேர்ந்த முகேஷ் குமார், அஷுதோஷ் மற்றும் சன்னி சவுதரி ஆகிய மூன்று பேரும் அம்மாவட்டத்தின் பதர்வாஹ் பகுதியிலுள்ள ஒரு தனியார் விருந்தினர் இல்லத்தில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.
அப்போது, அவர்களது சகோதரர் ஒருவரது அழைப்புக்கு பதிலளிப்படாததினால் சந்தேகமடைந்த அவர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் நேற்று (ஜன.1) இரவு அம்மூவரின் செல்போன் எண்களை வைத்து சோதனை செய்த போலீஸார் அவர்கள் தங்கியிருந்த விருந்தினர் இல்லத்தை கண்டுப்பிடித்து அங்கு சென்றுள்ளனர்.
பின்னர் நீண்ட நேரமாக அவர்களது அறையின் கதவை தட்டியும் திறக்கப்படாததினால், காவல் துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, மூவரும் சுயநினைவு இல்லாமல் கிடந்தது தெரியவந்துள்ளது.
இதையும் படிக்க: ஜிம்பாப்வேவில் மரண தண்டனை ஒழிப்பு!
இதனைத் தொடர்ந்து, உடனடியாக அங்கு வரவழைக்கப்பட்ட மருத்துவர்கள் அவர்களை பரிசோதனை செய்து பார்த்ததில் மூவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தடவியல் நிபுணர்களை வரவழைத்து அவர்கள் தங்கியிருந்த அறையில் சோதனை மேற்கொண்டனர்.
தற்போது வரை அவர்களது மரணத்திற்கான முழுமையானக் காரணம் என்னவென்று தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் காவல்துறை மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் அந்த அறையினுள் கரிகட்டைகளைப் போட்டு குளிர்காயப் பயன்படுத்தப்பட்ட ஹீட்டரிலிருந்து வெளியானப் புகையினால் அவர்கள் மூச்சுத் திணறி பலியாகியிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.