இந்தோனேசிஷியா வந்தடைந்த ரோஹிங்கியா அகதிகள்
இந்தோனேசிஷியா வந்தடைந்த ரோஹிங்கியா அகதிகள்

2 படகுகளில் 260 ரோஹிங்கியா அகதிகள்! இந்தோனேசியாவில் தஞ்சம்!

இந்தோனேசியாவை வந்தடைந்த ரோஹிங்கியா அகதிகளைப் பற்றி...
Published on

இரண்டு படகுகள் மூலம் 260க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் இந்தோனேசியா நாட்டுக் கரைகளை வந்தடைந்தனர்.

மியான்மர் நாட்டிலிருந்து 2 படகுகள் மூலம் பயணித்த 260க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் நேற்று (ஜன.5) மாலை இந்தோனேசியா நாட்டின் கிழக்கு அச்சே மாகாணத்தின் கரைகளை வந்தடைந்துள்ளனர்.

படகுகள் மூலம் இந்தோனேசியா வந்த ரோஹிங்கியா அகதிகளில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கிழக்கு அச்சே காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அந்நாட்டு காவல்துறையும் ராணுவமும் ஐ.நா அகதிகள் ஆணையத்தின் உதவியோடு அவர்கள் அனைவரையும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருவதாகக் கூறினார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 300க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் கிழக்கு அச்சே மாகாணத்தின் கரைகளை வந்தடைந்துள்ளனர்.

இதையும் படிக்க: இந்தியர் கொலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 5 பேர் கைது!

முன்னதாக, மியான்மர் நாட்டைச் சேர்ந்த ரோஹிங்கியா இனத்தவர்கள் பெரும்பாலானோர் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் அந்நாட்டில் அவர்களுக்கு எதிராக நிகழும் தொடர் இனப்படுகொலை, கற்பழிப்பு ஆகியவற்றிலிருந்து தப்பித்து பக்கத்து நாடுகளில் அகதிகளாக குடியேறி வருகின்றனர்.

இவர்களில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வங்கதேசத்தின் முகாம்களில் தங்கியிருந்தனர்.

அந்நாட்டில் ஏற்பட்ட மாணவப் புரட்சி மற்றும் ஆட்சி கவிழ்பைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் அவர்கள் தஞ்சமடைந்து வந்தனர். இதனால், இந்த விவகாரத்தில் இந்தோனேசியா அரசு சர்வதேச நாடுகளின் உதவியை நாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com