ஆஸ்திரேலியா: சிறிய ரக விமானம் விபத்து! விமானி பலி!

ஆஸ்திரேலியாவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதைப் பற்றி...
பலியான விமானி மார்க் கிறிஸ்டி
பலியான விமானி மார்க் கிறிஸ்டி
Published on
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவின் வடக்கு மாகாணத்தில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளனதில் அதனை ஓட்டி வந்த விமானி பலியானார்.

அந்நாட்டின் டார்வின் மாகாணத்திலிருந்து 50 கி.மீ தொலைவிலுள்ள மறுசீரமைப்புப் பகுதியின் வானில் நேற்று (ஜன.12) பறந்துக்கொண்டிருந்த விமானம் திடீரென தாழ்வாகப் பறந்து கீழே விழுந்து நொறுங்கியது.

இதில், அந்த விமானத்தை ஓட்டி வந்த விமானி மார்க் கிறிஸ்டி (வயது 63) சம்பவ இடத்திலேயே பலியானார். அந்த விமானத்தில் அவருடன் பயணித்த 29 வயதுடைய பெண் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்த அந்நாட்டு காவல் துறை மற்றும் மீட்புப் படையினர், விபத்துக்குள்ளான விமானத்திலிருந்து மார்க்கின் உடலை மீட்டனர். மேலும், எந்தவொரு காயங்களும் இன்றி உயிர் பிழைத்த பெண்ணை மீட்டு ஹெலிக்காப்டர் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிக்க: காட்டுத்தீக்கு இரையாகும் வீடுகளைப் பாதுகாக்க ஒரு மணி நேரத்துக்கு ரூ.1.7 லட்சம்!

இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியதாவது, அந்த விமானம் திடீரென தாழ்வாகப் பறந்து, அங்குள்ள பாக் அணையின் நீரில் மோதி விபத்துக்குள்ளானதாகக் கூறியுள்ளனர். அந்த அணையின் தண்ணீரில் ஏராளமான முதலைகளும் நீர் மலைப்பாம்புகளும் உயிர் வாழ்வதாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய அப்பகுதியிலிருந்து தடயங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் ஆஸ்திரேலிய நாட்டில் 20 சிறிய ரக விமான்ங்களின் விபத்தில் 27 பேர் பலியானதகா அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com