காட்டுத்தீக்கு இரையாகும் வீடுகளைப் பாதுகாக்க ஒரு மணி நேரத்துக்கு ரூ.1.7 லட்சம்!

காட்டுத்தீக்கு இரையாகும் வீடுகளைப் பாதுகாக்க ஒரு மணி நேரத்துக்கு ரூ.1.7 லட்சம் செலவிடும் லாஸ் ஏஞ்சலீஸ் கோடீஸ்வரர்கள்..
மீட்புப் பணியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர்.
மீட்புப் பணியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர்.படம் | ap
Published on
Updated on
1 min read

அமெரிக்காவில் காட்டுத்தீக்கு இரையாகும் வீடுகளைப் பாதுகாக்க, லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த கோடீஸ்வரர்கள் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1.7 லட்சம் வரை செலவிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லாஸ் ஏஞ்சலீஸின் ஹாலிவுட் பகுதியில் முன்னணி திரைப்பட நிறுவனங்கள் மற்றும் திரைப்பட நகரங்கள் அமைந்துள்ளன. ஜனவரி 7-ஆம் தேதி லாஸ் ஏஞ்சலீஸின் பாலிசேட்ஸ் பகுதியில் திடீரென காட்டுத் தீ பரவியது.

7 நாள்களாக பற்றி எரியும் காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வனப்பகுதியில் ஏற்பட்ட இந்தத் தீ கட்டுக்கடங்காமல் பரவி வரும் தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் கடுமையாகப் போராடி வருகின்றனர்.

கலிபோர்னியா முழுவதும் பல காட்டுத்தீகள் பரவி வருவதால், லாஸ் ஏஞ்சலீஸின் மில்லியனர்கள் பிரத்யேகமான தனியார் தீயணைப்பு சேவைகளை நாடியுள்ளனர்.

ஜுராசிக் காலத்தைச் சேர்ந்த டைனோசர் கால் தடங்கள் கண்டுபிடிப்பு!

பொது தீயணைப்புத் துறைகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதால், சில கோடீஸ்வரர்கள் ஒரு மணி நேரத்திற்கு 2,000 டாலர்கள் (சுமார் ரூ.1.7 லட்சம்) செலுத்தி தனியார் நிறுவனங்கள் மூலமாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தனியார் தீயணைப்பு வீரர்கள் மழைத் துளி விழுவதுபோல செயற்கையான ஸ்பிரிங்லர்களை அமைத்து தண்ணீரை செலுத்தி வீடுகளைத் தீப்பிடிக்காத வண்ணம் பாதுகாப்பார்கள்.

இந்த நிறுவனங்கள் தீத்தடுப்பு மருந்துகளை வீடுகள் மீது தெளித்தும், மரங்களை தீப்பிடிக்காத வகையில் பாதுகாக்கும் ஜெல் சேவைகளையும் வழங்குகின்றன.

லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் காட்டுத் தீயில் சிக்கி 24 பேர் உயிரிழந்தனர். தீயில் சுமார் 12,000-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்தன. மேலும் காட்டுத்தீயில் இருந்து 1 லட்சத்திற்கும் அதிகமான மக்களை வெளியேற்றப்பட்டுள்ளனர். காட்டுத்தீயினால் 135 பில்லியன் முதல் 150 பில்லியன் டாலர் வரை சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத்தீக்கு இரையான ரூ.10,770 கோடி சொகுசு பங்களா!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com