தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை வங்கக் கடல், அரபிக் கடலில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு சிஜேபி-இன் தேசியக் கொடி போராட்டம்: தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு தீவிரமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா: முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட சுகாதாரத் துறைகோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

பிரேசில்: கனமழை மற்றும் நிலச்சரிவினால் 10 பேர் பலி!

பிரேசில் நாட்டில் தொடர் மழையினால் 10 பேர் பலியானதைப் பற்றி..

நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

Updated On :

பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவினால் 10க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரிய நாடான பிரேசிலில் கடந்த ஒரு வருடமாக ஏற்பட்டு வரும் அதிபயங்கர வானிலை மாற்றங்களினால் அவ்வப்போது அங்கு பேரிடர்கள் நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த ஜன.11 அன்று அந்நாட்டின் இபாடிங்கா நகரத்தில் சுமார் 80 மி.மீ (3 இன்ச்) அளவிலான மழைப் பொழிவுப் பதிவானது. இதனைத் தொடர்ந்து, அப்பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டது. மேலும், பெத்தானியா நகரத்தைச் சுற்றியுள்ள குன்றுகளில் இருந்து ஏற்ப்பட்ட நிலச்சரிவினால் அப்பகுதியிலுள்ள குடியிருப்புப் பகுதிகள் அனைத்தும் மண்ணுக்குள் புதைந்தன.

இந்த நிலச்சரிவில் சிக்கிப் பலியான ஒரு சிறுவன் உள்பட 10 பேரது உடல்கள் தற்போது வரை மீட்கப்பட்டுள்ள நிலையில், பலியானவரது எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, கடந்த 2024 ஆம் ஆண்டின் ஏபிரல் மற்றும் மே மாதங்களில் அந்நாட்டின் தெற்கு பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பெருவெள்ளத்தினால் சுமார் 180பேர் பலியானார்கள்.

மேலும், 17 ஆண்டுகளில் இல்லாத அளவிலான காட்டுத்தீ அந்நாட்டிலுள்ள அமேசான் காடுகளில் ஏற்பட்டதினால் அந்நாடு கடும் வறட்சியையும் சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.