ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

DIN

புஷ்பா - 2 படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான திரைப்படம் புஷ்பா - 2 .

இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் உலகளவில் ரூ.1,831 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது.

மேலும், 2024 ஆம் ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டரான புஷ்பா 2 ராஜமௌலியின் பாகுபலி - 2 வசூலான ரூ. 1790 கோடியைக் கடந்து வசூலித்தது.

சங்கராந்தியை முன்னிட்டு ஆந்திரம் மற்றும் தெலுங்கானாவில் புஷ்பா - 2 படத்தின் நீக்கப்பட்ட 20 நிமிடக் காட்சிகள் மீண்டும் சேர்க்கப்பட்டு 3.35 மணிநேரம் கொண்ட திரைப்படமாக திரையிடப்பட்டது.

புஷ்பா -2 திரைப்படம் 56 நாள்களுக்குப் பிறகே ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் முன்னதாக தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், இத்திரைப்படம் ஜன. 30 ஆம் தேதிக்கு மேல் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.