கஞ்சா சாகுபடிக்கு ஹிமாச்சல அரசு அனுமதி!

மருத்துவ ஆராய்ச்சிகளுக்காக கட்டுப்பாடுகளுடன் கஞ்சா செடியை வளர்க்க ஹிமாச்சலப் பிரதேச மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கஞ்சா இலை (மாதிரி படம்)
கஞ்சா இலை (மாதிரி படம்)
Published on
Updated on
2 min read

தர்மசாலா: தொழில், அறிவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சிகளுக்காக கட்டுப்பாடுகளுடன் கஞ்சா செடியை வளர்க்க ஹிமாச்சலப் பிரதேச மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் இது பொதுமக்களுக்கு பொருந்ததாது என அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் போதைப்பொருள்கள், கஞ்சா பயன்பாடு அதிகரித்து வருவதாக மக்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், ஹிமாச்சலப் பிரதேசத்தில் கஞ்சா செடி வளர்க்க அந்த மாநில அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

அதாவது தொழில், அறிவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நோக்கங்களுக்காக கட்டுப்பாடுகளுடன் கஞ்சாவை வளர்க்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

காங்க்ரா மாவட்டத்தில் உள்ள தர்மசாலாவில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவை கூட்டத்தில், 2023 ஆம் ஆண்டு பேரிடரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்பு நிவாரணங்களை குலு மாவட்டம் டாண்டி கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த சிறப்பு நிவாரணங்கள் திட்டத்தின்படி, டாண்டி கிராமத்தில் தீ விபத்தில் சேதமடைந்த 147 வீடுகளில் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.7 லட்சமும், பகுதியளவு சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.1 லட்சமும், சேதமடைந்த மாட்டு கொட்டைகைகளுக்கு ரூ.50,000 வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தில்லி ஏய்ம்ஸ் நிறுவனம் போலவே, சிம்லாவின் சாமியானாவில் ஏய்ம்ஸ், ரூ.56 கோடியில் காங்க்ராவின் டாண்டாவில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் அரசு மருத்துவக் கல்லூரியில் ரோபோடிக் அறுவை சிகிச்சைக்கான அதிநவீன இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை வாங்குவதற்கு ஒப்புதல்.

சிறுநீரகவியல், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், இருதய அறுவை சிகிச்சை மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சை ஆகியவற்றில் மேம்பட்ட அறுவை சிகிச்சை சேவைகளை செயல்படுத்தும் விதமாக டாண்டா மற்றும் சாமியானாவில் ரோபோடிக் அறுவை சிகிச்சையை அறிமுகப்படுத்தவும்,

சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதியை வழங்குவதற்காக குலு பேருந்து நிலையம் மற்றும் பீஜ் பாராகிளைடிங் பாயிண்ட் இடையே ஒரு ரோப்வே நிறுவவும், இந்த பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக பயணிகளுக்கான சேவைகளை மேம்படுத்துவதற்காக ஹிமாச்சல சாலை போக்குவரத்துக் கழகத்திற்கு 24 குளிர்சாதன வசதி கொண்ட சூப்பர் சொகுசு பேருந்துகளை வாங்குவதற்கும், மாநில வரி மற்றும் கலால் துறையின் கள அலுவலகங்களுக்கு 100 மோட்டார் சைக்கிள்கள் வாங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள ஓட்டுநர் பணியிடங்கள், அனைத்து பிரிவினருக்கான குரூப் 3 மற்றும் குரூப் 4 பணியிடங்கள், மூன்று துறை ஆணையர்கள், நிலப் பதிவேடுகள் இயக்குநர், வருவாய் பயிற்சி நிறுவனம் ஜோகிந்தர்நகர் (மண்டி), ஹோல்டிங்ஸ் ஒருங்கிணைப்பு இயக்குநரகம் (சிம்லா), தீர்வு அலுவலகம் காங்க்ரா மற்றும் தீர்வு அலுவலகம் சிம்லா ஆகிய அலுவலகங்களில் நியமிக்கப்பட்ட பணியாளர்கள் ஆகியோரின் அலுவலகங்களை மாநிலப் பணியாளரின் வரம்பிற்குள் கொண்டுவருவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் தொழில், அறிவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சிகளுக்காக கட்டுப்பாடுகளுடன் கஞ்சா செடியை வளர்க்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது கட்டுப்பாடுகளுடன் இந்த கஞ்சா சாகுபடியை இரண்டு பல்கலைக்கழங்கள் மேற்கொள்ள அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. முக்கிய ஆய்வை மேற்கொள்ளும் பொருட்டு, காங்க்ரா மாவட்டம் பாலம்பூர் சௌத்ரி சர்வான் குமார் கிரிஷி விஸ்வவித்யாலயா மற்றும் சோலன் மாவட்டம் நௌனியில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். பர்மர் தோட்டக்கலை பல்கலைக்கழகத்தினர் மட்டும் குறிப்பிட்ட அளவு கஞ்சா செடியை வளர்த்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு, தோட்டக்கலை பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றால் கூட்டாக மேற்கொள்ளப்படும். இந்த முயற்சிக்கான ஒருங்கிணைப்புத் துறையாக வேளாண் துறை நியமிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட், குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போன்ற மாநிலங்களை பின்பற்றி மருத்துவ நோக்கங்களுக்காக கஞ்சா செடியை வளர்க்க அனுமதி வழங்கியதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்த செடி வளர்ப்பு கடுமையான கண்காணிப்பின் கீழ் இருக்கும் எனவும், மக்களுக்கு இந்த அனுமதி பொருந்தாது என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com