இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

மோசடி: ராஜபக்ச மகன் கைது!

இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச இலங்கை குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது.

யோஷித ராஜபக்ச

Published On :

பணமோசடி வழக்கில், இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச இலங்கை குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை முன்னாள் அதிபர், பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ச மீதான பணமோசடி புகாரில் அந்த நாட்டின் குற்றப் புலனாய்வு காவல் துறை விசாரணை மேற்கொண்டு வந்தது.

இந்த வழக்கில் சில வாரங்களுக்கு முன்பு யோஷித ராஜபக்சவுக்கு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.

இந்நிலையில் விசாரணை முடிவடைந்த நிலையில், பணமோசடி சட்டத்தின் கீழ் தவறு செய்ததற்கான ஆதாரங்கள் உறுதியானதையடுத்து யோஷித ராஜபக்ச இன்று பெலியட்டா பகுதியில் சிஐடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை அரசின் தலைமை வழக்கறிஞரின் ஆலோசனைக்குப் பிறகு யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.