புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை(ஜன. 26) அரிட்டாபட்டி பயணம்!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை(ஜன. 26) அரிட்டாபட்டி செல்லவிருக்கிறார்.

News image

முதல்வர் மு.க. ஸ்டாலின்

கோப்புப் படம்

Updated On :25 ஜனவரி 2025, 4:10 am

DIN

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை(ஜன. 26) மதுரை அரிட்டாபட்டிக்கு செல்லவிருக்கிறார்.

மதுரை மாவட்டம், மேலூா் அருகே அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்க கடந்த ஆண்டு நவம்பா் மாதத் தொடக்கத்தில் ஏலத்தின் மூலம் மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.

இந்நிலையில் சுரங்கம் தோண்டும் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, அரிட்டாபட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி மக்கள், அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்பினா் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். தமிழக அரசும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் சட்டப்பேரவையிலும் தனித் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்திலும் தமிழக எம்.பி.க்கள் குரல் கொடுத்தனா்.

தொடர்ந்து, தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை தலைமையிலான பாஜக குழுவினா், அரிட்டாபட்டி அம்பலக்காரா்களுடன் மத்திய சுரங்கத் துறை அமைச்சா் கிஷண் ரெட்டியை ஜன. 22 அன்று சந்தித்து சுரங்கத் திட்டத்தை ரத்து செய்யும்படி கோரிக்கை விடுத்தனா். திட்டத்தை ரத்து செய்வது குறித்து பிரதமருடன் ஆலோசனை நடத்திய பிறகு முடிவெடுக்கப்படும் என்று அமைச்சா் கிஷண் ரெட்டி உறுதியளித்தாா்.

இதன்பின்னர் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு ஜன. 23 அன்று அறிவித்தது. இதனை அரிட்டாப்பட்டி மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை(ஜன,. 26) அரிட்டாபட்டி செல்லவிருக்கிறார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்த மதுரை அரிட்டாபட்டி போராட்டக்குழுவினர், டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

மேலும் அரிட்டாபட்டி, வெள்ளாளபட்டி பகுதியில் நாளை(ஜன. 26) நடைபெறும் பாராட்டு விழாவில் கலந்துகொள்ள முதல்வருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். முதல்வரும் விழாவில் கலந்துகொள்வதாக உறுதியளித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

நாளை காலையில் குடியரசு தின நிகழ்வுகள் முடிந்தபிறகு காலை 11.30 மணிக்கு விமானம் மூலமாக மதுரை செல்லும் முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்து சாலை வழியாக அரிட்டாபட்டி சென்று அங்கு நடைபெறும் பாராட்டு விழாவில் கலந்துகொள்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.