கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி படுகாயமடைந்துள்ளார்.
பாலக்காடு மாவட்டம் வலையாரில் மக்கள் குடியிருக்கும் பகுதியில் இன்று (ஜன.25) காலை காட்டுயானை ஒன்று புகுந்து அட்டகாசம் செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அந்த யானையை கிராமத்துவாசிகள் ஒன்றிணைந்து விரட்ட முயற்சித்துள்ளனர். அப்போது, திடீரெனத் அந்த காட்டு யானை ஊர் மக்களை விரட்டியுள்ளது.
இதில், அந்த கிராமத்தைச் சேர்ந்த விஜயன் (வயது 35) என்ற விவசாயியை அந்த யானை தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த விஜயனை மீட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதையும் படிக்க: ஹரியாணா: பசக நிர்வாகி சுட்டுக்கொலை!
பின்னர், அங்கிருந்து அவர் திருச்சூர் மாவட்டத்திலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அனுப்பப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வரும் விஜயனின் உடல் நிலை தற்போது சீராகவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் கடந்த 2024 டிசம்பரில் காட்டு யானை தாக்கியதில் 23 வயது இளைஞர் அமர் இலாஹி பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.