ஹரியாணா: பகுஜன் சமாஜ் நிர்வாகி சுட்டுக்கொலை!

ஹரியாணாவில் பகுஜன் சமாஜ் நிர்வாகி சுட்டுக்கொல்லப்பட்டதைப் பற்றி...
சுட்டுக்கொல்லப்பட்ட பசக நிர்வாகி ஹர்பிலாஸ் சிங் ராஜுமஜ்ரா
சுட்டுக்கொல்லப்பட்ட பசக நிர்வாகி ஹர்பிலாஸ் சிங் ராஜுமஜ்ரா
Published on
Updated on
1 min read

ஹரியாணா மாநிலம் அம்பலா மாவட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

அம்பலா மாவட்டத்தின் நரயின்கார் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகியான ஹர்பிலாஸ் சிங் ராஜுமஜ்ரா அவரது நண்பர்களான புனித் மற்றும் குகல் ஆகிய இருவருடன், நேற்று (ஜன.24) மாலை அவர்களது காரில் சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த இரண்டு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் காரில் இருநதவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இந்த தாக்குதலில் ஹர்பிலாஸ் மற்றும் புனித் ஆகிய இருவரின் மீதும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து படுகாயமடைந்தனர். உடனடியாக இருவரும் மீட்கப்பட்டு சண்டிகரிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த ஹர்பிலாஸ் சிங் ராஜுமஜ்ரா நேற்று இரவு பரிதாபமாக பலியானார். படுகாயமடைந்த புனித் தற்போது நலமாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: கஞ்சா சாகுபடிக்கு ஹிமாச்சல அரசு அனுமதி!

இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் தப்பியோடிய குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக, கடந்த 2024 ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைகார கும்பலினால் வெட்டி படுகொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com