மேற்கு ஆப்பிரிக்க பொருளாதார அமைப்பிலிருந்து ஆட்சி கவிழ்ப்பினால் பாதிக்கப்பட்ட 3 நாடுகள் அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளன.
இக்கோவாஸ் என்றழைக்கப்படும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம் (ECOWAS) எனும் கூட்டமைப்பிலிருந்து மக்களாட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவ ஆட்சி நடைபெறும் நைஜர், மாலி மற்றும் புர்கினா ஃபாஸோ ஆகிய 3 நாடுகள் அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளன.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் மூன்று நாடுகளும் விலகுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று (ஜன.29) முதல் அது அமலுக்கு வந்துள்ளதாக அந்த பொருளாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஜப்பானில் அணுகுண்டு வீசப்பட்டு 80 ஆண்டுகள்! அதிபர் டிரம்பிற்கு அழைப்பு!
இருப்பினும், அந்த 3 நாடுகளும் எப்போது வேண்டுமானாலும் வந்து சேர அதன் கதவுகளை திறந்து வைத்திருப்பதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. மேலும், அம்மூன்று நாடுகளைச் சேர்ந்த மக்கள் இக்கோவாஸின் பாஸ்போர்ட்டுடன் தங்களது நாட்டிற்குள் சுதந்திரமாக பயணிக்க அனுமதிக்குமாறு அதன் உறுப்பு நாடுகளிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
முன்னதாக, கடந்த 1975 ஆம் ஆண்டு உறுப்பு நாடுகளினுள் பொருளாதார ஒருங்கிணைப்பை ஊக்குவிக்க 15 மேற்கு ஆப்பிரிக்க நாடுகளை உள்ளடக்கி இக்கோவாஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.