கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் கவிழ்ந்த லாரி: தண்ணீரில் மிதக்கும் எரிவாயு உருளை!

சமையல் எரிவாயு உருளை ஏற்றிச் சென்ற லாரி வியாழக்கிழமை சாலையின் தடுப்பை உடைத்துக் கொண்டு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சமையல் எரிவாயு உருளை ஏற்றிச் சென்ற லாரி ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஏரியில் மிதக்கும் சமையல் எரிவாயு உருளை மீட்கும் அந்த பகுதியினர்.
சமையல் எரிவாயு உருளை ஏற்றிச் சென்ற லாரி ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஏரியில் மிதக்கும் சமையல் எரிவாயு உருளை மீட்கும் அந்த பகுதியினர்.
Published on
Updated on
1 min read

திருவண்ணாமலை: செய்யாறு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சமையல் எரிவாயு உருளை ஏற்றிச் சென்ற லாரி வியாழக்கிழமை சாலையின் தடுப்பை உடைத்துக் கொண்டு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் இருந்து 357 சமையல் எரிவாயு உருளைகளை ஏற்றிச் சென்ற லாரி திருவண்மாலை மாவட்டம் செய்யாறு அருகே சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையின் தடுப்பை உடைத்துக் கொண்டு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்து வந்த போலீசார், அந்த பகுதி மக்கள் உதவியுடன் படுகாயங்கம் அடைந்த லாரி ஓட்டுநரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ஏரியில் தண்ணீரில் மிதந்து வந்த சமையல் எரிவாயு உருளைகளை மீட்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அதிர்வையும் ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X