காப்பகத்திலிருந்து காணாமல்போன சிறுவன்! 2 ஆண்டுகள் கழித்து மீட்பு!

புது தில்லியில் 2 ஆண்டுகளுக்கும் முன்னர் காப்பகத்திலிருந்து காணாமல் போன சிறுவன் மீட்கப்பட்டுள்ளதைப் பற்றி...
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

புது தில்லியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல்போன சிறுவனை அம்மாநில காவல் துறையினர் தற்போது மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தில்லியிலுள்ள தனியார் தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான குழந்தைகள் காப்பகத்திலிருந்து இரண்டு சிறுவர்கள் காணாமல் போனார்கள். அதன் பின்னர், காவல் துறையினர் புது தில்லியின் அனைத்து ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்கள், உணவகங்கள் என பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தினர்.

இருப்பினும், அவர்கள் இருவரையும் கண்டுபிடிக்க முடியாததினால் அவர்கள் குறித்த தகவல்கள் தருபவர்களுக்கு ரூ.20,000 சன்மானமாக வழங்கப்படும் என அறிவித்து காவல் துறையினர் அவர்களை தேடி வந்தனர்

இதையும் படிக்க: ராகுல் மீதான அவதூறு வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

இந்நிலையில், சிறுவர்கள் குறித்து வெளியிடப்பட்ட அடையளங்களுக்கு ஏற்றபடியான ஒரு நபர் தக்‌ஷின்புரி பகுதியிலுள்ள உணவகத்தில் வேலை பார்த்து வருவதாக காவல் துறையினருக்கு நேற்று (ஜன.29) தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்று அந்த நபரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் காப்பகத்திலிருந்து காணாமல் போனது அவர் தான் என்றும், அந்த காப்பகத்தின் கட்டுபாடுகளை மீறியதினால் தண்டிக்கப்படுவார்களோ என்ற அச்சத்தில் தானும் மற்றொரு சிறுவனும் அங்கிருந்து தப்பித்து பின்னர் தனித்தனியாக பிரிந்து விட்டதாக அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, கொல்கத்தாவில் வீடற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட அநத சிறுவனை கடந்த 2018 ஆம் ஆண்டு குழந்தைகள் காப்பகத்தில் அதிகாரிகள் சேர்த்துள்ளனர். அப்போது, அவர் தங்களது காணாமல்போன மகன் என்று உரிமைக்கோரி ஒரு குடும்பம் வந்துள்ளது. ஆனால், மரபணு சோதனையில் அது பொய் என்று உறுதி செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com