

மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் நினைவு நாள் இன்று(ஜன. 30) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியும் வருகின்றனர்.
இதையும் படிக்க: இலங்கையில் விடுவிக்கப்பட்ட 6 மீனவர்கள் சென்னை வருகை!
இந்த நிலையில், காந்தியடிகளின் நினைவு நாளையொட்டி எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியின் உருவப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.